முக்கிய செய்திகள்:
கேஜ்ரிவாலை விடுவிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவு

பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரி தொடர்ந்தஅவதூறு வழக்கில், ஜாமீன் பெறுவதற்காக பிணைப் பத்திரம் தாக்கல் செய்ய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் சம்மதம் தெரிவித்தார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று, ஜாமீன் விவகாரத்தில் அரவிந்த் கேர்ஜிவால் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால், நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில், ஜாமீன் பெற ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பிணைப் பத்திரம் அளிக்க மறுத்தார். இதனால கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தை அவர் நாடினார்.

இந்நிலையில், ஜாமீன் பெறுவதற்கு பிணைப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று அறிவுறுத்தியது.இதனை ஏற்றுக் கொண்ட கேஜ்ரிவால் தரப்பு, பிணைப் பத்திரம் தாக்கல் செய்ய ஒப்புக்கொண்டது. இதையடுத்து, அரவிந்த் கேஜ்ரிவால் சார்பில் அவரது வழக்கறிஞர் பிணைப் பத்திரத்தைத் தாக்கல் செய்தார்.இதையடுத்து, அரவிந்த் கேஜ்ரிவாலை திஹார் சிறையில் இருந்து விடுதலை செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்