முக்கிய செய்திகள்:
நரேந்திர மோடி - நவாஸ் ஷெரீப் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடியை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மோடி பிரதமராக பதவியேற்றப் பிறகு பாகிஸ்தான் பிரதமருடன் நடைபெறும் முதல் நல்லுறவு பேச்சுவார்த்தை இதுவாகும்.

சந்திப்பின் போது, பிரதமர் மோடியுடன், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.முன்னதாக, ஹைதராபாத் இல்லத்தில் மோடி - நவாஸ் சந்திப்பு நடைபெற்றது. அங்கு வருகை தந்த நவாஸ் ஷெரீபை மோடி கைகுலுக்கி வரவேற்றார்.

பாகிஸ்தானில் நடைபெற்று வரும், மும்பை 26 / 11 பயங்கரவாத தாக்குதல் வழக்கு விசாரணை குறித்து நரேந்திர மோடி, நவாஸ் ஷெரீப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தவிர, இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக மேம்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.இரு நாடுகளின் முக்கியப் பிரச்சினையாக இருக்கும் பயங்கரவாதத்தை ஒடுக்குவது குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.

மேலும் செய்திகள்