முக்கிய செய்திகள்:
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு

நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அவரைத் தொடர்ந்து, பிரதமர் பதவியேற்ற நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய இணையமைச்சர்களாக பதவியேற்றனர்.

மத்திய அமைச்சர்களாக 23 பேரும், மத்திய இணையமைச்சர்களாக 22 பேரும் என மொத்தம் 45 பேர் பதவியேற்றனர்.

பதவியேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு நவாஸ் ஷெரீப், ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக, ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த நரேந்திர மோடிக்கு, சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்பு அளித்தனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த விழாவில், சுமார் 4,000 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.

பதவி விலகும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா சிங் பாட்டீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து இக்கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றது.

மேலும் செய்திகள்