முக்கிய செய்திகள்:
காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி தேர்வு

பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த படுதோல்விக்குப் பிறகு முதல் முறையாக இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாராளுமன்ற கட்சி தலைவர் பதவிக்கு சோனியா காந்தி பெயரை மல்லிகார்ஜூன கார்கே முன்மொழிந்தார். அதனை மோசினா கித்வாய் மற்றும் மூத்த தலைவர்கள் வழிமொழிந்தனர். இதையடுத்து சோனியா காந்தி, பாராளுமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இக்கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “காங்கிரஸ் கட்சி தோல்வியடைவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இதேபோல் தோல்வியடைந்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்