முக்கிய செய்திகள்:
ஆடுகளை கடித்து குதறிய வெறிநாய்கள்

திண்டுக்கல் அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் அரசு வழங்கிய 9 விலையில்லா ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

திண்டுக்கல் என்.ஜி.ஓ.காலனி ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பாண்டி. இவர் ஆடுகள் வைத்து மேய்த்து வருகிறார். கடந்த 2 வருடத்திற்கு முன்பு தமிழகஅரசு சார்பில் வழங்கப்பட்ட விலையில்லா ஆடுகள் தற்போது 15 ஆடுகளாக அதிகரித்தது. இந்த ஆடுகளை தனது வீட்டருகே கிடையில் நேற்று அடைத்து வைத்திருந்தார். நேற்று சில வெறிநாய்கள் இந்த ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கிடைக்குகள் புகுந்தது.

நாய்கள் கடித்து குதறியதில் 9 ஆடுகள் பலியாயின. மேலும் 2 ஆடுகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆடுகளின் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்த பாண்டி தான் வளர்த்த ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதார். காயம்பட்ட ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சையளித்தார்.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் பாண்டி புகார் செய்ததின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்