முக்கிய செய்திகள்:
டெல்லி வந்து சேர்ந்தார் மோடி

13 வருடங்களாக குஜராத்தை ஆட்சி செய்த மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இன்று குஜராத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஆனந்தி பென் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட மோடி, பின்னர் தனது தாயின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டு டெல்லிக்கு புறப்பட்டார்.

இன்று மாலை அவர் தனது சமையல்காரர் பத்ரி மற்றும் தனி உதவியாளர்களான தினேஷ் தாக்கூர், ஓ.பி. சிங் ஆகியோருடன் டெல்லி வந்து சேர்ந்தார். இதில் சமையல்காரர் பத்ரி மோடியிடம் 10 ஆண்டுகளாக வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மோடியுடன் அவரது நம்பிக்கைக்குரிய சகாவான அமித் ஷாவும் உடன் வந்தார். ரேஸ் கோர்ஸ் சாலையில் பிரதமருக்கென ஒதுக்கப்பட்டுள்ள 7ஆம் எண் வீட்டில் தனது உதவியாளர்களுடன் மோடி குடியேறினார்.

மேலும் செய்திகள்