முக்கிய செய்திகள்:
ஐக்கிய ஜனதா தளத்திற்கு லாலு ஆதரவு

பீகாரில் மைனாரிட்டி அரசை நடத்தி வந்த நிதிஷ்குமார் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் தனது ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த ஜித்தன் ராம் மஞ்ஜியை புதிய முதலமைச்சராக நிதிஷ் தேர்வு செய்தார்.

புதிய முதலமைச்சராக பதவியேற்ற மஞ்ஜி நாளை தனது ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை கோருகிறார். இந்த நிலையில் இன்று ஐக்கிய ஜனதா தளத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்போவதாக லாலு அறிவித்துள்ளார். எதிரெதிர் துருவமாக இருந்த இரு கட்சிகளும் தற்போது ஓரணியில் இணைந்திருப்பது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்