முக்கிய செய்திகள்:
சமாஜ்வாடி கட்சியின் அமைப்பு அடியோடு கலைப்பு

மக்களவைத் தேர்தலில் உ.பி.யில். சமாஜ்வாடி கட்சி படுதோல்வி அடைந்தது. 80 தொகுதிகள் கொண்ட உ.பி.யில் 5-ல் மட்டுமே சமாஜ்வாடி கட்சியால் வெற்றி பெற முடிந்தது.

இதனால் முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் கடும் அதிருப்தியில் இருந்தனர். நேற்று அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் நீக்கப்பட்டனர். இன்று அக்கட்சியின் உ.பி. அமைப்பு ஒட்டு மொத்தமாக கலைக்கப்பட்டுள்ளது. ஆனால், அகிலேஷ் யாதவ் கட்சியின் தலைவராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். அதனால் தொண்டர்கள் யாரும் கவலையடைய வேண்டாம். கட்சியை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுங்கள் என்று முலாயம் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று உ.பி. அமைப்புகள் கலைக்கப்பட்டது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்