முக்கிய செய்திகள்:
முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் மோடி

நாட்டின் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தான் வகித்து வரும் குஜராத் முதல் மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்தார். 12 வருடமாக அம்மாநில முதல்வராக பதவி வகித்து வந்த மோடி இன்று ஆளுநர் கமலா பெனிவாலை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இதனை தொடர்ந்து அம்மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக ஆனந்தி பென் படேல் பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்