முக்கிய செய்திகள்:
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்ற காவல்

ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த கெஜ்ரிவால் பல்வேறு ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தம் மீது சுமத்தியதாக கூறி பா.ஜ.க முன்னாள் தலைவரான நிதின் கட்காரி மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கின் மீதான விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் 10000 ரூபாய்க்கான ஜாமீன் பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதை கெஜ்ரிவால் ஏற்க மறுத்ததால் அவரை வரும் 23ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்