முக்கிய செய்திகள்:
பா.ஜ.க. அறிவித்தால் டெல்லி முதல்வர் வேட்பாளராக ஏற்க தயார்: கிரண் பேடி

கடந்த வருடம் நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால், அம்மாநில சட்டப்பேரவை தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அரசியலில் குதிக்க தயார் என அறிவித்த கிரண் பேடி, இன்று மீண்டும் ஒரு படி மேலே போய் பாரதீய ஜனதா கட்சி டெல்லி மாநில முதல் மந்திரி வேட்பாளராக தன்னை நியமித்தால் அதை ஏற்க தயார் என தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே மோடிக்கு ஆதரவாக கிரண் பேடி பேசி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல்வேறு முறை டெல்லி மாநில முதல்வர் பதவிக்கு போட்டியிடுவீர்களா என்று கேட்பதாலேயே கிரண் பேடி இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்