முக்கிய செய்திகள்:
மோடிக்கு உமர் பாராட்டு

நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க உள்ள மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தெற்கு ஆசிய கூட்டமைப்பை சேர்ந்த சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை பதவியேற்பு விழாவிற்கு அழைப்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. மோடியின் இந்த அணுகுமுறையை காஷ்மீர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா பாராட்டியுள்ளார்.

குறிப்பாக பாகிஸ்தான் பிரதமரை பதவியேற்பு விழாவிற்கு அழைத்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது என்று கூறியுள்ள உமர் இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையே தடைபட்டுள்ள பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்