முக்கிய செய்திகள்:
சிக்கிம் முதலமைச்சராக பதவியேற்றார் பவன் சாம்லிங்

சிக்கிம் மாநில முதலமைச்சராக தொடர்ந்து 5வது முறையாக பதவியேற்று பவன் குமார் சாம்லிங் சாதனை படைத்துள்ளார்.

அம்மாநிலத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று ஆளுநர் ஸ்ரீநிவாஸ் பாட்டில் சாம்லிங்குக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் மேலும் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 22 தொகுதிகளை சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் சாம்லிங் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சாம்லிங்கை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகள்