முக்கிய செய்திகள்:
மோடியை கட்டித்தழுவி வாழ்த்திய அத்வானி

நரேந்திர மோடிக்கு ஒருசமயம் வழிகாட்டியாக இருந்த அத்வானி, மக்களவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கியபோது மோடியை முன்னிலைப்படுத்துவதை விரும்பாமல் ஒதுங்கியே இருந்தார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சமாதானம் செய்ததையடுத்து அவர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டார்.

மோடி தலைமையில் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதும் நேற்று அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அத்வானி வாழ்த்து தெரிவித்தார். ஆனால், பிறகு பா.ஜனதாவின் வெற்றிக்கு மோடியின் பங்கு குறித்து மதிப்பீடு செய்ய வேண்டு என்று கருத்து தெரிவித்தார்.

இதனால், அத்வானி இன்னும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், இன்று டெல்லி சென்ற நரேந்திர மோடி கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் மோடிக்கு பூங்கொத்துக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மூத்த தலைவர் அத்வானியும் அவருக்கு பூங்கொத்து வழங்கினார். அதனை புன்னகையுடன் பெற்றுக்கொண்ட மோடி, அத்வானியின் காலைத் தொட்டு ஆசி பெற்றார். பின்னர் இருவரும் கட்டித்தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

மத்தியில் அமைய உள்ள பா.ஜனதா அரசாங்கத்தில் அத்வானிக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்