முக்கிய செய்திகள்:
டெல்லியில் மோடிக்கு கோலாகல வரவேற்பு

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 333 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. பா.ஜனதா கட்சி மட்டும் 283 தொகுதிகளில் வென்று தனித்து ஆட்சி அமைக்கிறது.

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசி, வதோதரா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். வதோதராவில் 5 லட்சத்து 70 ஆயிரத்து 128 வாக்குகள் வித்தியாசத்திலும், வாரணா சியில் 3 லட்சத்து
71 ஆயிரத்து 265 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார்.

அதை தொடர்ந்து அவர் குஜராத் தலைநகர் காந்தி நகரில் வசிக்கும் தனது தாயார் ஹீராபெண்ணை சந்தித்து ஆசி பெற்றார். மாலையில் தான் வெற்றி பெற்ற வதோதரா தொகுதிக்கு சென்று மக்களிடையே பேசினார்.

‘‘நாடடின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன்’’ என அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் எழுச்சி மிகு உரையாற்றினார்.

வருகிற 21-ந் தேதி நாட்டின் 15-வது பிரதமராக அவர் பதவி ஏற்கிறார். இந்த நிலையில் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பின் அவர் இன்று விமானம் மூலம் டெல்லி வந்தார்.

அவரது வருகையையொட்டி டெல்லி விமான நிலையம் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் விமானநிலையத்துக்கு வெளியே கூடி இருந்தனர்.

மேலும், பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் உள்ள அசோகா ரோடு வரையிலும் ரோட்டின் இரு புறங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. விமான நிலையத்தில் அவரை கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் மூத்த
தலைவர்கள் வரவேற்றனர்.

அதன் பின்னர் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த அவரை பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த தொண்டர்கள் ‘பிரதமர் மோடி வாழ்க’ என வாழ்த்து கள் முழங்க உற்சாக கோஷ மிட்டனர். மலர்களை தூவி வாழ்த்தினர்.

இசைக்கருவிகள் மற்றும் மேளதாளம் முழங்கின. உற்சாக மிகுதியால் தொண்டர்கள் நடனமாடினர். கைகளில் பா.ஜனதா கொடியுடன் வந்து அவரை வரவேற்றனர்.

இதனால் உற்சாகமடைந்த மோடி கூடியிருந்த தொண்டர்களை பார்த்து வெற்றியின் இலக்கான இரட்டை விரல்களை காட்டினார்.

பின்னர் காரில் ஏறி அசோகா ரோட்டில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றார். அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களும் நூற்றுக்கணக்கான கார்களும் அணிவகுத்து சென்றன.

அவருக்கு ‘கமாண்டோ’ படையினர் பாதுகாப்பு கொடுத்தனர். அவர் சென்ற வழி நெடுகிலும் ரோட்டின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கூடிநின்று உற்சாக வரவேற்பளித்தனர்.

அவர்களின் வரவேற்பை கையசைத்து அவர் ஏற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து பா.ஜனதா கட்சி அலுவலகம் வந்தடைந்தார்.

அங்கும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் பேசிய அவர் ‘‘இந்த வெற்றி எனக்கு மட்டுமே சொந்தமல்ல, கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்களின் அயராத உழைப்பாலும், முயற்சியாலும்
கிடைத்துள்ளது’’ என்றார்.

அதன் பின்னர் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நடந்தது. அதில் மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் மத்தியில் புதிய அரசு அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

நரேந்திரமோடி டெல்லி வருகையையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பபு பலப்படுத்தப்பட்டிருந்தது. பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கான போலீசாரும், தேசிய பாதுகாப்பு படை கமாண் டோக்களும்
குவிக்கப்பட்டிருந்தனர்.

அவர் செல்லும் வழியெங் கிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கண்காணிப்பு தீவிரப்படுத்த உயரமான மாடிகளிலும் நிறுத்திவைக்கப்பட்டிருந் தனர்.

நரேந்திரமோடி செல்லும் வழியில் போலீஸ் மோப்ப நாய் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. கட்சி தலைமை அலுவலகம் உள்ள பகுதியில் 2 ரோடுகளிலும் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. ரோந்து பணியும்
போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்