Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
ஆந்திரா உள்ளாட்சி தேர்தலில் தெலுங்கு தேசம் முன்னணி - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
ஆந்திரா உள்ளாட்சி தேர்தலில் தெலுங்கு தேசம் முன்னணி

ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா – சீமாந்திரா உருவாக்கப்பட்டது. ஜூன் மாதம் 2–ந்தேதி அதிகாரப்பூர்வமாக இரு மாநிலம் உருவாக உள்ளது.2 மாநிலத்துக்கும் கடந்த மார்ச் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. 10 மாநகராட்சி, 145 நகராட்சிகளுக்கு மார்ச் 30–ந்தேதியும், மற்றும் ஊராட்சி பதவிகளுக்கு ஏப்ரல்–6, 11–ந் தேதியும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டால் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வழக்கு தொடரப்பட்டதால் வாக்கு எண்ணிக்கை ஒத்தி வைக்கப்பட்டது.தற்போது இந்த இரு மாநிலத்திலும் பாராளுமன்றம், சட்டசபை தேர்தல் முடிந்து விட்டது. இதையடுத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.இதில் சீமாந்திராவில் உள்ள 13 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் தெலுங்கு தேசம் கட்சி முன்னணியில் உள்ளது. கடப்பா, சித்தூர், கர்னூல் ஆகிய 3 மாவட்டங்களில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி முன்னணி பெற்று உள்ளது

 

மேலும் செய்திகள்