முக்கிய செய்திகள்:
ராணுவ தளபதியை நியமிக்க தேர்தல் ஆணையம் அனுமதி

இந்திய ராணுவ தளபதியாக உள்ள ஜெனரல் விக்ரம் சிங்கின் பதவிக்காலம் வரும் ஜுலை 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. அவர் ஓய்வு பெறுவதற்கு இரு மாதங்களுக்கு முன்னதாகவே புதிய ராணுவ தளபதியை நியமிக்க வேண்டும் என்பது விதி.

எனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு புதிய ராணுவ தளபதியை நியமிக்க முடிவு செய்தது. ஆனால் அவ்வாறு நியமனம் செய்வதற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்தது. புதிய அரசை தேர்தந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் நிலையில் ராணுவ தளபதியை நியமிக்கும் விஷயத்தில் காங்கிரஸ் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறது என பா.ஜ.க தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தது.

இவ்விஷயத்தில் அவசரப்படவில்லை என தேர்தல் ஆணையத்திடம் கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி ஆணையத்தின் அனுமதியை பெற்ற பின்பே புதிய தளபதி நியமிக்கப்படுவார் என தெரிவித்திருந்தது. இன்று இந்த விஷயத்தை பரீசிலித்த தேர்தல் ஆணையம், மார்ச் 27ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகளின் வரம்புக்குள் பாதுகாப்பு படைகளுக்கான புதிய நியமனம், பதவி உயர்வு, கொள்முதல், டெண்டர் வெளியீடு ஆகியவை வராததால் மத்திய அரசு புதிய ராணுவ தளபதியை நியமித்துக்கொள்ள அனுமதி அளித்தது.

மேலும் செய்திகள்