முக்கிய செய்திகள்:
நரேந்திர மோடி மீது சோனியா கடும் தாக்கு

உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரில் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

“வாஜ்பாய் மற்றும் பிற முன்னாள் பிரதமர்கள், அந்த பதவியின் கண்ணியத்தை கடைப்பிடித்தனர். ஆனால், ராஜீவ் காந்தியை மோடி அவமதித்து பேசியிருப்பது மிகவும் அற்பத்தனமானது.

நாட்டின் வளமான பண்பாடு மற்றும் உயர்பண்புடைமையை மோடி மனதில் கொள்ள வேண்டும். இதுபோன்ற கீழ்த்தரமான சிந்தனையும் வார்த்தைகளும் அவருக்கு தகுதியானதல்ல. இவ்வாறு அவர் பேசினால் அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பதை நீங்களே அறிந்துகொள்ள முடியும்.

குஜராத் வளர்ச்சியடைந்ததாக அவர் தவறான தகவல்களை கொடுத்து வருகிறார். அங்குள்ள 40 சதவீத மக்களுக்கு குடிப்பதற்கும் பாசனத்திற்கும் தண்ணீர் இல்லை என்று சோனியா பேசினார்.

மேலும் செய்திகள்