முக்கிய செய்திகள்:
பா.ஜ.க- ஆம் ஆத்மி தொண்டர்கள் மோதல்

மோடி கூட்டத்துக்கு அனுமதி அளிக்காததை கண்டித்து இந்து பனாரஸ் பல்கலைக்கழகம் முன்பு ஏராளமான பாரதீய ஜனதா தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தேர்தல் கமிஷனுக்கு எதிராக கோஷமிட்டனர். எங்கு பார்த்தாலும் காவி கொடிகளே காணப்பட்டன.

இந்த நிலையில் ஆம் ஆத்மி தொண்டர்கள் கையில் துடைப்பத்தை ஏந்தி கெஜ்ரிவால் வாழ்க என கோஷம் எழுப்பியபடி சென்றனர். இதனால் கோபம் அடைந்த பா.ஜனதா தொண்டர்கள் அவர்களை முற்றுகையிட்டனர். சில பா.ஜனதா தொண்டர்கள், ஆம் ஆத்மி தொண்டர்களை நெட்டித்தள்ளினர். இதனால் இரு கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது.

உடனே அங்கு இருந்த போலீசார் மற்றும் தேர்தல் பாதுகாப்பு வீரர்கள் மோதலைத் தடுத்து கூட்டத்தை கலைத்தனர். பின்னர், ஆம் ஆத்மி தொண்டர்கள் அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

மேலும் செய்திகள்