முக்கிய செய்திகள்:
கேரளாவில் நாளை முழு அடைப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று கேரள அரசு பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்க்கும் விதமாக கேரளாவில் நாளை முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கியில் செய்தியாளர்களை சந்தித்த முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குழு, நாளை கேரளா முழுவதிலும் இந்த தீர்ப்புக்கு எதிராக முழு அடைப்பு நடத்தப்படும் என்று தெரிவித்தது.

பெரியாறு அணை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, அணையின் ஆபத்தான நிலையை தெளிவுபடுத்த கேரள அரசு தவறிவிட்டதாக கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்