முக்கிய செய்திகள்:
ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை

ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காளைகள் துன்புறுத்தப்படுவதால் ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என அந்த தீர்ப்பில் கூறப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு முழுமையாகத் தடை விதிக்கக் கோரி விலங்குகள் நல அமைப்பு சார்பில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, மத்திய, ஜல்லிக்கட்டு பேரவை, விலங்குகள் நல வாரியம் ஆகியோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்கவும் காளைகள் துன்புறுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும் விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமிக்கலாம் என மத்திய அரசு சார்பில் விவாதம் நடந்தது.

ஆனால், போட்டிகளின் போது கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படாததால், காளைகள் துன்புறுத்தப்படுவதாக ஜல்லிக்கட்டிற்கு தடைவிதிக்க வேண்டும் என விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் காளைகள் துன்புறுத்தப்படுவதாலும், அதனை தடுக்க தகுந்த நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்பதாலும் ஜல்லிக்கட்டு நடத்தக் தடை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது.

மேலும் செய்திகள்