முக்கிய செய்திகள்:
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தலாம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு உருவாக்கிய அணை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் அணை பாதுகாப்பை ஆராய மூன்று பேர் குழுவை அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று கேரள அரசு பிறப்பித்த அணை பாதுகப்புச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி உள்பட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதால், அதன் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசின் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. நீதிமன்ற தீர்ப்புகளை சட்டம் மூலம் தடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

 

மேலும் செய்திகள்