முக்கிய செய்திகள்:
காஷ்மீர் வாக்குச்சாவடியில் வெடிகுண்டு வீசி தாக்குதல்

காஷ்மீரில் பாரமுல்லா தொகுதிக்கு உட்பட்ட வாகுச்சாவடி ஒன்றின் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அதே வாக்குச்சாவடியில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலில் 8–வது கட்டமாக காஷ்மீர் மாநிலத்தில் 2 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. இதற்காக அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், பாரமுல்லா வாக்குச்சாவடி மீது சில நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இருவர் காயமடைந்தனர்.

மேலும், அதே வாக்குச்சாவடியில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டு, செயலிழக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பாரமுல்லா வாக்குச்சாவடியில் பதற்றம் நிலவுகிறது. இதனை தவிர பிற இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருவதாக காஷ்மீர் தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் செய்திகள்