முக்கிய செய்திகள்:
பொய் கணக்கு காட்டும் வேட்பாளர்கள்: நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

வேட்புமனுவில் பொய் கணக்கு காட்டும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுரீந்தர் சிங் நிஜார் அடங்கிய அமர்வு இன்று இது குறித்த அறிவிக்கையில், தேர்தல் செலவுகள் குறித்து பொய்யான தகவல் தரும் வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யலாம் தெரிவித்துள்ளது.

மேலும் வேட்புமனுவில் பொய் கணக்கு காட்டும் வேட்பாளர்களையும் தகுதிநீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது என்று அறிவித்தது.

தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும், பொய்யான சொத்து மதிப்பை தந்ததாகவும் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் மீது வந்த புகார் மீதான விசாரணையில் இந்த அறிப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது. மேலும் அசோக் சவான் மீதான புகாரை 45 நாட்களுக்குள் விசாரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியான இரண்டு நாட்களில், வேட்பாளர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டது தொடர்பாக பணம் தந்ததாக 854 வழக்குகளைத் தேர்தல் ஆணையம் பதிவு செய்தது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.

மேலும் செய்திகள்