முக்கிய செய்திகள்:
பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த 9 நாட்களில் இது மூன்றாவது சம்பவம் ஆகும்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: "பூஞ்ச் மாவட்டம் மெந்தர் செக்டார் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது சிறிய ரக மற்றும் தானியங்கி ஆயுதங்களைக் கொண்டு பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே 11.45 வரை கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது" என்றார்.

மேலும் செய்திகள்