முக்கிய செய்திகள்:
சந்திரபாபுநாயுடு போட்ட ஓட்டு செல்லாது

தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபுநாயுடு குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

பின்னர் வாக்குச்சாவடி அருகில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், நான், எனது மனைவி புவனேசுவரி, மகன் லோகேஷ், மருமகள் பிராம்மணி ஆகியோர் வாக்களித்தோம். ஒவ்வொருவரும் தங்கள் வாக்குரிமையை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். நான் பாராளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் தாமரை சின்னத்தில் தலா ஒரு வாக்கை பதிவு செய்தேன் என்றார்.

வாக்காளர்கள், தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக தெரிவிப்பது தேர்தல் விதிமுறைப்படி தவறாகும். சந்திரபாபு நாயுடு தனது வாக்குரிமையை பகிரங்கப்படுத்தியதால், அவர் பதிவு செய்த வாக்கை நோட்டாவின் கீழ் செல்லாத ஓட்டாக அறிவிக்கிறோம் என்று தெலுங்கானா மாநில தேர்தல் அதிகாரி பன்வர்லால் அறிவித்தார்.

மேலும் செய்திகள்