முக்கிய செய்திகள்:
நிலையான ஆட்சி ஏற்பட 300 தாமரைகள் மலர வேண்டும் : நரேந்திர மோடி

ஹிமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நரேந்திர மோடி: "நான் இவ்வாறு பேச விரும்பவில்லை. இருந்தாலும் சொல்கிறேன். காங்கிரஸ் கட்சி ஏமாற்றுக் கட்சி, அக்கட்சியின் தேர்தல் அறிக்கை பொய்யானது" என்றார்.

மோடி மேலும் பேசியதாவது: "கடந்த 2009-ல் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது, ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதாக தெரிவித்தது. ஆனால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை. அப்படி என்றால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பொய் அறிக்கை தானே? தவறுகளை நீங்கள் மன்னிப்பார்கள். ஆனால் ஏமாற்றுக்காரர்களை ஒருபோதும் நீங்கள் மன்னிக்க மாட்டீர்கள் என்பது தெரியும்.

மத்தியில் ஆள பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு முறை வாய்ப்பளியுங்கள். காங்கிரஸ் கட்சிக்கு 60 ஆண்டுகள் கொடுத்த நீங்கள், எனக்கு 60 நாட்கள் தாருங்கள். நான் உங்களுக்காக சேவை செய்வேன். நாட்டுக்கு இப்போது தேவை ஆட்சித்தலைமை அல்ல மக்கள் சேவகனே. ஒரு சேவகனாக நான் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். அதற்கு உங்கள் ஆசி வேண்டும். நாட்ட்ல் நிலையான ஆட்சி ஏற்பட 300 தாமரைகள் மலர வேண்டும். மக்கள் பாஜகவுக்கே வாக்களிக்க வேண்டும்" என்று வாக்கு சேகரித்தார்.

மேலும் செய்திகள்