முக்கிய செய்திகள்:
மோடிக்கு பிரியங்கா அறிவுரை

காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுலை ஆதரித்து அமேதி தொகுதியில் அவரது சகோதரி பிரியங்கா பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், ராகுலை மோடி காமெடியன் என்று கூறியுள்ளதை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது;

எனது சகோதரரை அவர்கள் ஒரு சமயம் இளவரசர் என்றும், மற்றொரு சமயம் காமெடியன் என்று விமர்சிக்கின்றனர். நாட்டின் பிரதமராக விரும்பும் அவர்கள் ஏன் இப்படி சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்கள்? இனி மேலாவது அந்த பதவிக்கேற்றவாறு பொறுப்புடன் பேசுங்கள். மக்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்று கூறுங்கள். வேலை வாய்ப்புக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்று எடுத்துக் கூறுங்கள். அதை விட்டு விட்டு இப்படியெல்லாம் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்ளாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்