முக்கிய செய்திகள்:
அதிமுக எம்.பி.க்கள் 4 பேர் பதவி ஏற்பு

அ.தி.மு.க. சார்பில் எஸ்.முத்துக்கருப்பன், கே.செல்வராஜ், சசிகலா, புஷ்பா, விஜிலா சத்யானந்த் ஆகியோரும், அ.தி.மு.க. ஆதரவுடன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த டி.கே.ரங்க ராஜனும், தி.மு.க. சார்பில் திருச்சி சிவாவும் போட்டியின்றி பாராளுமன்ற மேல்சபை எம்.பி.க்களாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

இவர்களில் திருச்சி சிவா (தி.மு.க.), டி.கே.ரங்கராஜன் (மார்க்.கம்யூ) ஆகியோர் எம்.பி.க்களாக பதவி ஏற்கும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

அ.தி.மு.க. சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 4 அ.தி.மு.க. எம்.பி.க்களும் இன்று பதவி ஏற்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அவர்கள் டெல்லி வந்தனர்.

மதியம் 12 மணிக்கு புதிய மேல்சபை எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 4 பேரும் பதவி ஏற்றனர். அவர்களுக்கு துணை ஜனாதிபதியும் பாராளுமன்ற மேல்–சபை சபாநாயகருமான அமீத் அன்சாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மேலும் செய்திகள்