முக்கிய செய்திகள்:
7ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை முடிவடைகிறது

நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான 7ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 30ந் தேதி நடைபெறுகிறது. நாளை மறுநாள் 9 மாநிலங்களில் 89 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த 7ஆம் கட்ட தேர்தலில் ஆந்திராவில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 17 தொகுதிகளுக்கும், பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 7 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மிரில் ஒரு தொகுதிக்கும், குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கும், யூனியன் பிரதேசமான தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டியூ டாமன் ஆகிய இரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த 7 ஆம் கட்ட தேர்தலில் ஆந்திராவில் 265 பேரும், பீகாரில் 94 பேரும், ஜம்மு-காஷ்மிரில் 14 பேரும், குஜராத்தில் 334 பேரும், பஞ்சாபில் 253 பேரும், உ.பி.யில் 233 பேரும், மேற்குவங்கத்தில் 87 பேரும், தாத்ரா நகர் ஹவேலியில் 14 பேரும், டியூ டாமனில் நால்வரும் போட்டியிடுகின்றனர். ஒட்டுமொத்தமாக 9 மாநிலங்களிலும் 1298 வேட்பாளர்கள் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்