முக்கிய செய்திகள்:
ஒத்திவைப்பு கலாச்சாரம் போக வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்

நீதிமன்ற நடவடிக்கைகளில் ஒத்திவைப்பு கலாச்சாரம் கவலை அளிப்பதாக கூறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, வழக்குகளை விரைந்து முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒத்திவைப்பு கோரிய ஒரு வழக்கின் விசாரணையின்போது தலைமை நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

“ஒத்திவைப்பு விவகாரங்களை கவனிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பதிவாளருக்கு அந்த வழக்குகளை கையாளும் பணி வழங்கப்படும். அதனால், ஒத்திவைப்பு கோரும் வழக்குகள், கோர்ட் நடவடிக்கைகள் பட்டியலில் இடம்பெறாது.

ஒத்திவைப்பு கலாச்சாரம் கண்டிப்பாக போக வேண்டும். ஒத்திவைப்புக்காக வழக்கறிஞர்கள் கடிதம் எழுதுவதற்கு அனுமதி இல்லை. வழக்கு விசாரணைக்கு வரும்போது வழக்கறிஞர்களும் ஆஜராக வேண்டும். அத்தகைய வழக்குகள் மட்டுமே கோர்ட் விசாரணைக்கு பட்டியலிடப்படும்” என்றும் தலைமை நீதிபதி லோதா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்