முக்கிய செய்திகள்:
உச்சநீதிமன்றத்தின் 41-வது தலைமை நீதிபதியாக ஆர்.எம். லோதா பதவியேற்பு

உச்சநீதிமன்றத்தின் 41-வது தலைமை நீதிபதியாக திரு. ஆர்.எம். லோதா இன்று பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில் அவருக்கு, குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த திரு. P.சதாசிவம் ஓய்வு பெற்றதையடுத்து, மூத்த நீதிபதி திரு. ராஜேந்திர மால் லோதா, 41-வது தலைமை நீதிபதியாக ஏற்கனவே நியமிக்கப்பட்டார். அவர், இன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்‍பேற்றுக்கொண்டார். குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில் திரு. ஆர்.எம். லோதாவுக்கு, குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் திரு.ஹமீது அன்சாரி, மத்திய அமைச்சர்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

64 வயதான திரு.ஆர்.எம்.லோதா, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை விசாரித்து வருகிறார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு. ஏ.கே. கங்குலி, பயிற்சி வழக்குரைஞராக தன்னை அணுகிய ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதை விசாரித்து, சம்பந்தப்பட்ட நீதிபதியின் நடத்தையை கண்டித்ததாலும், "ஆசிட்" வீச்சினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நஷ்டஈடு வழங்க தீர்ப்பு தந்ததாலும், நீதிபதி திரு. ஆர்.எம். லோதா, பெண்கள் அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினரால் பெரிதும் பாராட்டப்பட்டவர். தலைமை நீதிபதி பொறுப்பேற்றுள்ள திரு. ஆர்.எம். லோதா, வரும் செப்டம்பர் 27-ம் தேதி வரை இப்பதவியை வகிப்பார்.

மேலும் செய்திகள்