முக்கிய செய்திகள்:
சிரஞ்சீவி மீது முட்டை வீச்சு

தெலுங்கு நடிகரும் மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி, ஆந்திராவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,"வாஜ்பாய், அத்வானி போன்ற மூத்த தலைவர்களை ஒரங்கட்டியவர் தான் மோடி, அவர் ஒரு கொடுங்கோலன், ஹிட்லர். பாஜக ஒரு வகுப்புவாத கட்சி. மேலும் இங்கு இருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கிரிமினல் பின்னனி கொண்டது.

ஆந்திராவை பிரித்து தனி தெலங்கானா அமைக்கப்பட்டதற்கு பாஜக, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளே காரணம்” என்றார்.

இவ்வாறு பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசிய சிரஞ்ஜீவி மீது கூட்டத்தில் புகுந்த சில பாஜக தொண்டர்கள் திடீரென அவரை நோக்கி முட்டைகளை வீசி தாக்கினர். அப்போது பதற்றமடைந்த சிரஞ்ஜீவி தனது பேச்சை சில நிமிடங்கள் நிறுத்தினார்.

இதனால், அவரது பேச்சை கேட்டுக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. நிலைமையை சமாளித்த போலீசார், முட்டை வீச்சு சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்தனர். இதன் பின் சிரஞ்ஜீவி தொடர்ந்து பேசிவிட்டு தனது பிரச்சரத்தை முடித்துக் கொண்டார்.

மேலும் செய்திகள்