முக்கிய செய்திகள்:
பத்ம விருதுகளை பிரணாப் வழங்கினார்

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், எழுத்தாளர் ருஷ்கின் பாண்ட், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ இன்று வழங்கினார்.

பல்வேறு துறைகளில் தனித்துவம் புரிந்த சாதனையாளர்களுக்கு பாரத ரத்னாவை அடுத்து உயரிய விருதாக கருதப்படும் பத்ம் விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜீ இன்று வழங்கினார்.

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், 56 பிரிவுகளுக்கான பத்ம விருதுகள் வழங்கப்பட்டது. எழுத்தாளர் ருஷ்கின் பாண்ட், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை அனுஜம் சோப்ரா, பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நடிகர் பரேஷ் ராவல், கல்வியாளர் குலாம் முகமதி ஷேக் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

வெகு விமரிசையாக நடைபெற்ற இந்த விழாவில் 1 பத்ம விபூஷன், 11 பத்ம பூஷன் மற்றும் 44 பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்