முக்கிய செய்திகள்:
மூன்றாவது அணியுடன் கூட்டணிக்கு தயார்: சல்மான் குர்ஷித்

மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தனது சொந்த கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில் :

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால் மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிக்கவோ இல்லை மூன்றாவது அணியிடம் இருந்து ஆதரவு பெறவோ காங்கிரஸ் தயாராக இருக்கிறது. நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பார். கடவுள் அலையே காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முடியாத நிலையில் மோடி அலை எப்படி காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முடியும்" என கேள்வி எழுப்பினார்.

வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்த மோடி கங்கை மாதா அழைத்ததால்தான் அங்கு போட்டியிடுவதாக தெரிவித்தார். வாரணாசியில் பிரபலங்கள் பலரை சந்தித்த மோடி, கங்கை நதிக்கு செல்லவில்லையே என கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்