முக்கிய செய்திகள்:
அன்னை மடியில் தவழும் குழந்தை பெறும் உணர்வை வாரணாசியில் நான் பெறுகிறேன் : மோடி

வாரணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த போது அவருடன் மதன் மோகன் மாளவியா மகன் கிரிதர் மாளவியா, பத்ம விபூஷண் விருது பெற்ற சந்து லால் மிஸ்ரா, படகோட்டி நிஷாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் மோடி செய்தியாளர்களிடம் பேசியதாவது: "வாரணாசியில் போட்டியிடுவது குறித்து யோசிக்கும் போதெல்லாம், பாஜகவினர் விருப்பத்தின் பேரிலேயே இத் தொகுதியில் போட்டியிடப்போகிறேன் என நினைத்திருந்தேன்.

ஆனால், இப்போது தான் எனக்கு புரிகிறது, பாஜகவினர் விருப்பமோ அல்லது என் சுய விருப்பமோ என்னை வாரணாசியில் போட்டியிட வைக்கவில்லை. கங்கை மாதா அழைத்ததால்தான் புனித பூமியான வாரணாசியில் நான் போட்டியிடுகிறேன்.

அன்னை மடியில் தவழும் குழந்தை பெறும் உணர்வை வாரணாசியில் நான் பெறுகிறேன். காசியை, உலக நாடுகளின் ஆண்மீக தலைநகராக மாற்றுவேன். காசி நகரின் ஏழை நெசவாளர்கள் வாழ்க்கை தரம் உயரச் செய்வேன். இவற்றை நிறைவேற்ற கடவுள் எனக்கு துணை நிற்க வேண்டும்" இவ்வாறு மோடி பேசினார்.

மேலும் செய்திகள்