முக்கிய செய்திகள்:
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

கருப்பு பண விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க தவறியதற்கு இன்று நீதிபதிகள் தங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

முறைகேடாக பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை கைப்பற்ற மத்திய அரசு எவ்வித முயற்சியும் செய்யவில்லை என்று நீதிபதிகள் இன்றைய விசாரணையின் போது குற்றஞ்சாட்டினர். இது நீதிமன்றத்தை முற்றிலும் அவமதிக்கும் செயல் என தெரிவித்த நீதிபதிகள் அரசு இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என கூறியுள்ளனர். பா.ஜ.க.வின் முக்கிய தலைவரும், பிரபல வழக்கறிஞருமான ஜெத்மலானியால் இந்த வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வரும் 29ந் தேதி நடைபெறப்போகும் விசாரணையில் அரசு தனது அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே உச்சநீதிமன்றம் தங்களது கண்காணிப்பில் 2 நபர் கமிட்டி ஒன்றை இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க நியமித்தது. ஆனால் மத்திய அரசோ இந்த வழக்கு தொடர்பான விசாரணையை நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நடத்தத்தேவையில்லை என்று கூறியது. மேலும் இதை விசாரிக்க அமலாக்க பிரிவு மற்றும் சி.பி.ஐ போன்ற அமைப்புகளே போதும் என நீதிமன்றத்தில் தெரிவித்தது.

மேலும் செய்திகள்