முக்கிய செய்திகள்:
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவுக்கு இந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காது : முலயாம்சிங்

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் அவர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மோடியின் ஆட்சியில் உரங்களின் விலை அதிகமானதால் 7,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். நாட்டில் உள்ள முஸ்லீம்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்களின் நிலையை மாற்ற எந்த அரசியல் கட்சியும் முன்வரவில்லை.

நரேந்திர மோடி பிரதமராவதை எங்களுடைய கட்சியால் மட்டுமே தடுக்க முடியும். எனவே மக்கள் சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவுக்கு இந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காது. மூன்றாவது அணியில் சமாஜ்வாடிக் கட்சி மிகப்பெரிய கட்சியாக அதிக இடங்களை பிடித்து மத்தியில் புதிய அரசை உருவாக்கும் என்று கூறினார்.

தனது மகன் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசின் செயல்பாடுகளை பாராட்டிய அவர், 2012ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் இரண்டு வருடத்தில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் சமாஜ்வாடி அரசு அதிக எண்ணிக்கையிலான நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதனை ஒவ்வொரு மாநிலங்களும் பின்பற்றுகின்றன என்று முலாயம் பேசினார்.

மேலும் செய்திகள்