முக்கிய செய்திகள்:
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது : முலாயம்சிங்

சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலயாம்சிங் இன்று தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசுகையில் :

காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவுக்கு இந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காது. எனவே மூன்றாவது அணி தலைமையில் மத்தியில் புதிய அரசு உருவாகும் என முலயாம் சிங் யாதவ் கூறினார்.

மேலும், “மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின் தேர்வு செய்யப்படுவார். பல கட்சிகள் உத்தரபிரதேசத்தில் முஸ்லீம்களின் வாக்குகளை கவருவதற்கு முயற்சி செய்து வருகின்றன. ஆனால் சமாஜ்வாடி கட்சி மாநிலத்தில் உள்ள 80 சதவிகித முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்கும். பெருஞ்சலுகைகளை அறிவித்த அவர் விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும் என்றும், பாசனத்திற்கு இலவசமாக தண்ணீர் வழங்கப்படும் என்று முலாயம் பேசினார்.

மேலும் செய்திகள்