Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/content/55/10886855/html/makkalkattalai/tamizhagatimes/adminpanel/inc/config.php on line 12
மேற்கு வங்க மாநிலம் முன்னேறி வருவது சிலருக்குப் பிடிக்கவில்லை : மம்தா பானர்ஜி - Tamizhaga Times
முக்கிய செய்திகள்:
மேற்கு வங்க மாநிலம் முன்னேறி வருவது சிலருக்குப் பிடிக்கவில்லை : மம்தா பானர்ஜி

மேற்குவங்க மாநிலம், பிர்பும் மாவட்டம் நல்ஹாட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது:


மால்டா ஓட்டல் அறையில் தங்கியிருந்தபோது குளியல் அறைக்குச் சென்றேன். அப்போது பயங்கர சத்தம் கேட்டது. அறை முழுவதும் புகை பரவியது. எதையும் பார்க்க முடியவில்லை. உடனடியாக எனது உதவியாளரை அழைத்தேன்.
அவர் ஓடி வந்து போர்வையால் மூடி என்னை பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தார். தீயணைப்புத் துறையினர் கூறிய போது, அறையில் விஷக் காற்று பரவியிருந்தது. அதை யார் சுவாசித்தாலும் உயிர்பிழைக்க முடியாது என்று தெரிவித்தனர்.

மேற்கு வங்க மாநிலம் முன்னேறி வருவது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர் கள் என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். என்னைக் கொன்றுவிட்டு மின்சார கசிவால் தீ விபத்து ஏற்பட்டதுபோல் சித்த ரிக்க சதித் தீட்டம் தீட்டியுள்ளனர்.

என்னை கொலை செய்தாலும் மக்கள் மத்தியில் நான் மறுபடியும் பிறப்பேன். மக்களுக்காக நான் பாடுபடுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் மம்தா கூறியதாவது:

ஓட்டல் அறையின் நச்சு புகையால் எனது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கள், முழு ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தினர். ஆனால் தேர்தல் நேரம் என்பதால் எனது பயணத் திட்டங்களை ரத்து செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார்.

 

மேலும் செய்திகள்