முக்கிய செய்திகள்:
ஒவ்வொரு ஏழைக்கும் உணவு கிடைப்பதை காங்கிரஸ் அரசு உறுதி செய்துள்ளது : ராகுல்

மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வாலாவில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும் உணவு கிடைப்பதை காங்கிரஸ் அரசு உறுதி செய்துள்ளது. 100 நாள் வேலைத்திட்டம் மூலம் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ். எல்லோருக்கும் கல்வி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்களுக்கான ஆதார விலையை காங்கிரஸ் அரசு பெருமளவு உயர்த்தியது.

அரசின் செயல்பாடுகள் பற்றி யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் கடசியினர் யாரும் திமிராகப் பேசுவது கிடையாது. கனிவாகவும் பண்பாகவும் பிரச்சாரம் செய்வது காங்கிரசாரின் இயல்பு. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்