முக்கிய செய்திகள்:
எந்த பட்டனை அழுத்தினாலும் காங்கிரசுக்கு ஓட்டு : வாக்கு எந்திரத்தால் பரபரப்பு

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது ஒரு எந்திரத்தில் பதிவாகும் வாக்குகள் காங்கிரஸ் சின்னத்திற்கே சென்றதால் வாக்காளர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.

புனே நகரில் உள்ள ஷாம்ராவ் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்காளர்கள் வரிசையாக வந்து வாக்களிக்கத் தொடங்கினர். முதலில் சில வாக்காளர்கள் தங்கள் விரும்பிய கட்சியின் சின்னத்திற்கு எதிரே உள்ள பட்டனை அழுத்திவிட்டு வெளியில் வந்துவிட்டனர். சிலர் தங்கள் சின்னத்திற்கு எதிரே உள்ள லைட் ஒளிராமல் காங்கிரஸ் சின்னத்திற்கு நேரே உள்ள லைட் ஒளிர்வதாக அங்குள்ள தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இதனால், உடனடியாக வாக்குப்பதிவை நிறுத்திய அதிகாரிகள், புதிய வாக்கு எந்திரம் கொண்டு வர உத்தரவிட்டனர். பழுதடைந்த அந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களித்த 28 வாக்காளர்களுக்கும் மீண்டும் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்