முக்கிய செய்திகள்:
மோடி அலை வீசுவதை காண முடியவில்லை : நக்மா

இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சத்திய நாராயணனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த நடிகை நக்மா பேசியதாவது

நாட்டில் நரேந்திர மோடி அலை வீசுவதாக கூறுகிறார்கள். நான் பல இடங்களில் பிரசாரம் செய்தேன். எங்கும் மோடி அலை வீசுவதை காண முடியவில்லை. மோடி அலை வீசுவதாக பாரதீய ஜனதா கட்சியினர்தான் ஒரு மாயையை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அலை வீசுவது உண்மை என்றால் மோடி ஏன் வலுவான தொகுதியில் போட்டியிட வேண்டும். பாரதீய ஜனதா இதுவரை வெற்றி பெறாத தொகுதியில் போட்டியிட வேண்டியது தானே?

பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதனை மக்கள் உணர வேண்டும். இவ்வாறு நக்மா கூறினார்.

மேலும் செய்திகள்