முக்கிய செய்திகள்:
சிறுபான்மை சமூகத்தினர் மோடியின் பெயரை கேட்டாலே பயப்படுகின்றனர் : நிதிஷ்குமார்

கரோத்தியா பஞ்சாயத்து அருகே இன்று நடந்த பிரசாரத்தில் நிதிஷ்குமார் பேசியதாவது:-

லல்லு பிரசாத் யாதவ் தன்னை மதச்சார்பின்மையின் நாயகனாக கூறிக்கொள்கிறார். ஆனால் அவரது கட்சி காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்தபோதுதான் கடந்த 1989ல் பகல்பூர் கலவரம் வெடித்தது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோது பகல்பூர் கலவரத்திற்கு காரணமாக இருந்தவர்களுக்கு அடைக்கலம் தந்தது. அதனால்தான் ஆயிரக்கணக்கான சிறுபான்மை சமூகத்தினர் அப்போது கொல்லப்பட்டனர். பிறகு, ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பின்பே கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்தது.

நாங்கள் பகல்பூர் கலவரத்திற்கு காரணமானவர்களை தண்டித்ததோடு மட்டும் நின்றுவிடவில்லை. அதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாத ஓய்வூதியமும் வழங்கி வருகிறோம். சிறுபான்மை சமூகத்தினர் மோடியின் பெயரை கேட்டாலே பயப்படுகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், அவர் எப்படி நாட்டை ஒற்றுமையுடன் வழிநடத்தி செல்லப் போகிறார்? இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்