முக்கிய செய்திகள்:
பத்து வருடங்களாக பிரதமர் ஏன் சிரித்ததே இல்லை : மோடி கிண்டல்

பீகார் மாநிலம் பகல்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் இதுகுறித்து மோடி பேசியதாவது:-

கடந்த பத்து வருடங்களாக பிரதமர் ஏன் சிரித்ததே இல்லை என நான் சிந்தித்திருக்கிறேன். அவருக்கு எதிராக சில விரும்பத்தகாத விமர்சனங்களையும் நான் எழுப்பியிருக்கிறேன். ஆனால் இந்த புத்தகத்தை (சஞ்சய பாரு எழுதியது) படித்த பிறகு நான் பிரதமரை பற்றி அவ்வாறு கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருக்க கூடாது என்றே எனக்கு தோன்றுகிறது.

பிரதமர் மீது எந்த தவறும் இல்லை. அவர் தேவையின்றி விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார். நடந்த எல்லா தவறுகளுக்கும் தாயும், மகனுமே (சோனியாவும், ராகுலும்) காரணம். காங்கிரசால் பிரதமர் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் கட்டளைப்படியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

சஞ்சய பாருவின் புத்தகம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமரின் மகள், அந்த புத்தகத்தில் தகவல்களை வெளியிட்டதன் மூலம் அவர் தங்களை ஏமாற்றி விட்டதாக கூறியிருக்கிறார். ஆனால் அப்புத்தகத்தில் எழுதியவைகளை தவறு என்று கூறவில்லை. சஞ்சய பாரு ஏமாற்றிவிட்டார் என்பதே அவரது கருத்து. எனவே கடந்த 10 வருடங்களாக இப்படித்தான் நடந்து வந்துள்ளது என்பதை பிரதமரின் குடும்பத்தினரே ஒப்புக்கொள்கிறார்கள் என்பது இதன்மூலம் தெரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்