முக்கிய செய்திகள்:
பெட்ரோல் விலை குறைந்தது

பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 70 காசுகள் குறைக்கப்பட்டது. உள்ளூர் விற்பனை வரி அல்லது வாட் வரியைப் பொறுத்து ஒவ்வொரு நகருக்கும் இது மாறுபடும். இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இதன்மூலம் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று நள்ளிரவு முதல் 85 காசுகள் குறைந்து, ரூ.71.41க்கு விற்பனை செய்யப்படும். சென்னையில் ஒரு லிட்டருக்கு 85 காசுகள் குறைகிறது. எனவே ஒரு லிட்டர் ரூ.75.49-லிருந்து ரூ.74.60 ஆக குறைகிறது.

மும்பையில் இன்று நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80க்கும், கொல்கத்தாவில் ரூ.79.25-க்கும் விற்பனை செய்யப்படும்.

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் பெட்ரோல் விலை குறைந்துள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்