முக்கிய செய்திகள்:
கடப்பா மாவட்டம் புலிவெந்துலா சட்டசபை தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி போட்டி

சீமாந்திராவில் 24 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை ஜெகன்மோகன் ரெட்டி நேற்று அறிவித்தார்.

கடப்பா மாவட்டம் புலிவெந்துலா சட்டசபை தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி போட்டியிடுகிறார். இவர் தற்போது கடப்பா தொகுதி எம்.பி.யாக உள்ளார். சீமாந்திரா மாநில முதல்–மந்திரி பதவியை குறி வைத்து இந்த முறை சட்டசபை தேர்தலில் களம் காணுகிறார். புலி வெந்தியா சட்டசபை தொகுதியில் முன்பு ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டியும், பின்னர் தாயார் விஜயம்மாவும் போட்டியிட்டு வென்ற தொகுதியாகும்.

மேலும் செய்திகள்