முக்கிய செய்திகள்:
மோடிக்கு தேசிய மகளிர் ஆணையம் கேள்வி

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் நிர்மலா சமந்த் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

மோடியின் திருமணம் குறித்து அவர் கூறும்போது பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடியின் மனைவி தனது சொத்துரிமை பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் இழந்துள்ளார். ஆனால் மோடி பெண்கள் உரிமைகளுக்காக பிரசாரம் செய்து வருகிறார்.

தனது வேட்பு மனுவில் அவர் தனது சொத்து விவரங்கள், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளார். ஆனால் முதல் முறையாக தனது மனைவியின் பெயரை குறிப்பிட வேண்டிய தேவை என்ன?

இதற்கு முந்தைய தேர்தல்களில் மனைவியின் பெயரை குறிப்பிடும்படி அவரிடம் தேர்தல் கமிஷன் கட்டாயப்படுத்த வில்லையா? இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்