முக்கிய செய்திகள்:
3வது கட்ட ஓட்டுப்பதிவு துவங்கியது

மக்களவை தேர்தலில் மிகப் பெரிய அளவிலான 3வது கட்ட ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. 11 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 லோக்சபா தோகுதிகளுக்கான ஓட்டுப்பதிவில் லட்சகணக்கான வாக்காளர்கள் ஓட்டளித்து வருகின்றனர்.

இன்று நடைபெறும் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் கமல்நாத், கபில் சிபல் மற்றும் அஜித் சிங் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இவர்கள் தவிர பா.ஜ., தரப்பில் நிதின் கட்காரி மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி வி.கே.சிங் ஆகியோர் போட்டியில் உள்ளனர். ஆம் ஆத்மி சார்பில் யோகேந்திர யாதவ், அசுதோஷ் மற்றும் ஷாஜியா இல்மி ஆகியோரும் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். பீகாரில் லோக்சபா சபாநாயகர் மீரா குமார் முக்கிய போட்டியாளராக உள்ளார். இவரை எதிர்த்து லோக்ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் போட்டியிடுகிறார்.

மேலும் செய்திகள்