முக்கிய செய்திகள்:
மக்களவைத் தேர்தல் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

நாகாலாந்து மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் உள்ள தலா ஒரு தொகுதிக்கும், அருணாசல பிரதேசம் மற்றும் மேகாலயாவில் உள்ள தலா 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. இது தவிர, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள 49 சட்டசபை தொகுதிகளுக்கும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

நாகாலாந்தில் உள்ள ஒரே பாராளுமன்ற தொகுதியில் நாகாலாந்து மக்கள் முன்னணி சார்பில் முதல்-மந்திரி நெய்பியூ ரியா போட்டியிடுகிறார். அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்பட 10 பேர் களத்தில் உள்ளனர். அருணாசலபிரதேசத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பாராளுமன்ற தொகுதிகளில் பல முனை போட்டி நிலவுகிறது.

இன்று தேர்தல் நடக்கும் 6 பாராளுமன்ற தொகுதிகளிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று மிசோராம் மாநிலத்தின் ஒரெயொரு பாராளுமன்ற தொகுதிக்கு நடக்க இருந்த தேர்தல் வருகிற 11-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்